×

البقرة

வசனம் 105

அல்-முக்தஸர்

مَّا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ وَلَا ٱلْمُشْرِكِينَ أَن يُنَزَّلَ عَلَيْكُم مِّنْ خَيْرٍ مِّن رَّبِّكُمْ ۗ وَٱللَّهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِۦ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ ﴿١٠٥﴾

அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடிய இவர்கள் - வேதக்காரர்களாக இருந்தாலும் சரி, இணைவைப்பாளர்களாக இருந்தாலும் சரியே - உங்களுக்கு இறைவனிடமிருந்து சிறியதோ பெரியதோ எவ்வித நன்மையும் இறங்குவதை விரும்பமாட்டார்கள். தூதுத்துவம், வஹி, ஈமான் ஆகிய அருட்கொடைகளை தான் நாடிய அடியார்களுக்கே அல்லாஹ் வழங்குகிறான். அவன்தான் மாபெரும் அருளாளன். படைப்புகள் அவனிடமிருந்தே நன்மைகளைப் பெற முடியும். தூதர்களை அனுப்புவதும் வேதங்களை இறக்குவதும் அவனுடைய அருளில் உள்ளவையே.