அல்-முக்தஸர்
مَا نَنسَخْ مِنْ ءَايَةٍ أَوْ نُنسِهَا نَأْتِ بِخَيْرٍ مِّنْهَآ أَوْ مِثْلِهَآ ۗ أَلَمْ تَعْلَمْ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ ﴿١٠٦﴾
அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்: குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தின் சட்டத்தை அல்லாஹ் நீக்கினால் அல்லது அதன் வார்த்தையை நீக்கி மக்கள் அதனை மறந்தால் அதைவிட பயனுள்ள ஒன்றை அல்லது அதைப்போன்ற ஒன்றை உடனடியாகவோ தாமதமாகவோ அவன் கொண்டுவருவான். இது அல்லாஹ்வின் அறிவு, ஞானத்தைக் கொண்டே நடைபெறக்கூடியதாகும். தூதரே! அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். அவன் தான் நாடியதைச் செய்கிறான் என்பதை நீர் நன்கறிவீர்.