×

البقرة

வசனம் 104

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَقُولُوا۟ رَٰعِنَا وَقُولُوا۟ ٱنظُرْنَا وَٱسْمَعُوا۟ ۗ وَلِلْكَـٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ ﴿١٠٤﴾

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுக்கு நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்துப் பேசும்படி அறிவுரை வழங்குகிறான்: நம்பிக்கையாளர்களே,எங்களைக் கவனியுங்கள் என்று பொருளுடைய "ராயினா "என்ற வார்த்தையைக் கூறாதீர்கள். ஏனெனில் யூதர்கள் இந்த வார்த்தையைத் திரித்து, முட்டாள் என்ற தவறான பொருளை மனதில் வைத்து நபியவர்களை அழைக்கின்றனர். எனவே அல்லாஹ் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறான். அதற்குப் பதிலாக "உன்ளுர்னா" என்ற வார்த்தையைப் பயன்படுத்துமாறு தன் அடியார்களுக்குக் கட்டளையிடுகிறான். இது எங்களைக் கவனியுங்கள் என்ற ஒரே பொருளையே தருவதுடன் ராஇனா என்பதைப் போன்று தவறான பொருளில் இதனைப் பயன்படுத்தவும் முடியாது. அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது.