அல்-முக்தஸர்
وَٱتْلُ مَآ أُوحِىَ إِلَيْكَ مِن كِتَابِ رَبِّكَ ۖ لَا مُبَدِّلَ لِكَلِمَـٰتِهِۦ وَلَن تَجِدَ مِن دُونِهِۦ مُلْتَحَدًا ﴿٢٧﴾
தூதரே! அல்லாஹ் உமக்கு வஹியாக அளித்த குர்ஆனை ஓதி அதன்படி செயல்படுவீராக. அதனுடைய வார்த்தைகளை மாற்றக்கூடியவர் யாரும் இல்லை. ஏனெனில் நிச்சயமாக அவை முழுக்க முழுக்க உண்மையானதாகவும் நீதியானதாகவும் இருக்கின்றது. அவனைத் தவிர உமக்கு ஒதுங்குவதற்கு அடைக்கலத்தையோ பாதுகாத்து அபயமளிப்பரையோ நீர் காணமாட்டீர்.