×

الكهف

வசனம் 26

அல்-முக்தஸர்

قُلِ ٱللَّهُ أَعْلَمُ بِمَا لَبِثُوا۟ ۖ لَهُۥ غَيْبُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ أَبْصِرْ بِهِۦ وَأَسْمِعْ ۚ مَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَلِىٍّ وَلَا يُشْرِكُ فِى حُكْمِهِۦٓ أَحَدًا ﴿٢٦﴾

தூதரே! நீர் கூறுவீராக: “அவர்கள் குகையில் தங்கியிருந்ததை அல்லாஹ்வே நன்கறிவான். அவர்கள் தங்கியிருந்த காலத்தை நாம் அறிவித்துவிட்டோம். அதற்குப் பிறகு எவருடைய கூற்றும் ஏற்றுக்கொள்ளப்படாது. வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவான விஷயங்களை அல்லாஹ்வே நன்கறிவான். அவன் எவ்வளவு நன்றாக பார்க்கக்கூடியவன்! அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் எவ்வளவு நன்றாக கேட்கக்கூடியவன்! அவன் அனைத்தையும் செவியேற்கிறான். அவர்களுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பொறுப்பாளன் இல்லை. தனது சட்டத்தில் யாரையும் அவன் சேர்த்துக்கொள்ளமாட்டான். அவன் தனித்து சட்டம் கூறுபவன்.