அல்-முக்தஸர்
وَٱصْبِرْ نَفْسَكَ مَعَ ٱلَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِٱلْغَدَوٰةِ وَٱلْعَشِىِّ يُرِيدُونَ وَجْهَهُۥ ۖ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُۥ عَن ذِكْرِنَا وَٱتَّبَعَ هَوَىٰهُ وَكَانَ أَمْرُهُۥ فُرُطًا ﴿٢٨﴾
தங்கள் இறைவனின் திருப்தியை நாடி காலையிலும் மாலையிலும் வணக்கம் மற்றும் பிரார்தனையின் மூலம் அவனை அழைத்துக் கொண்டிருப்போரின் சகவாசத்தைக் கடைபிடிப்பீராக. செல்வமும் பதவியும் உடையவர்களின் சகவாசத்தை நாடி உம் பார்வையை அவர்களை விட்டும் திருப்பிவிடாதீர். உள்ளத்தில் முத்திரையிடுவதன் மூலம் எவருடைய உள்ளத்தை நம்முடைய நினைவை விட்டும் அலட்சியம் செய்யக்கூடியதாக நாம் மாற்றிவிட்டவர்களுக்கு நீர் கட்டுப்படாதீர். அவர்கள் உம் சபையைவிட்டு ஏழைகளை விரட்டுமாறு உம்மை ஏவுகிறார்கள். தங்கள் இறைவனுக்குக் கட்டுப்படுவதைக்காட்டிலும் தங்களின் மன இச்சையைப் பின்பற்றுவதற்கே அவர்கள் முன்னுரிமை வழங்கினார்கள். அவர்கள் செயல்கள் அனைத்தும் வீணானவையாக ஆகிவிட்டன.