அல்-முக்தஸர்
وَضَرَبَ ٱللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ ءَامِنَةً مُّطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِّن كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ ٱللَّهِ فَأَذَٰقَهَا ٱللَّهُ لِبَاسَ ٱلْجُوعِ وَٱلْخَوْفِ بِمَا كَانُوا۟ يَصْنَعُونَ ﴿١١٢﴾
அல்லாஹ் ஒரு ஊரை - மக்காவை - உதாரணமாகக் கூறுகிறான். மக்காவைச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் போது அங்கு வசிப்பவர்களோ அச்சமின்றி பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரம் எல்லா இடங்களிலிருந்தும் இலகுவாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களோ அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொண்டார்கள். எனவே அவர்கள் பொய்பித்து நிராகரித்ததன் காரணமாக அல்லாஹ் அவர்களை அவர்களின் உடம்பில் மெலிவை ஏற்படுத்தும் கடும் பசியாலும் கடும் பயத்தாலும் தண்டித்தான். அவர்கள் அசய்துகொண்டிருந்த நிராகரிப்பான காரியங்களினால் பசியும், பயமும் அவர்கள் அணியும் ஆடையைப் போல் அவர்களுக்கு ஆகிவிட்டன.