×

النحل

வசனம் 111

அல்-முக்தஸர்

يَوْمَ تَأْتِى كُلُّ نَفْسٍ تُجَـٰدِلُ عَن نَّفْسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ ﴿١١١﴾

தூதரே!- ஒவ்வொரு மனிதனும் தனக்காக வாதிடும் அந்த நாளை நினைவு கூர்வீராக. அவன் அந்த நாளின் கடுமையினால் வேறு எவருக்காகவும் வாதாட மாட்டான். ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த நன்மை தீமைக்கேற்ப முழுமையாக கூலி வழங்கப்படும். நன்மைகள் குறைக்கப்பட்டோ, தீமைகள் அதிகரிக்கப்பட்டோ அவர்கள் மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது.