×

النحل

வசனம் 113

அல்-முக்தஸர்

وَلَقَدْ جَآءَهُمْ رَسُولٌ مِّنْهُمْ فَكَذَّبُوهُ فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ وَهُمْ ظَـٰلِمُونَ ﴿١١٣﴾

மக்காவாசிகளிடம் உண்மையானவர், நம்பிக்கையானவர் என்ற நற்பெயர் பெற்ற ஒரு தூதர் அவர்களிடம் வந்தார். அவர்தான் முஹம்மத். இறைவன் அவருக்கு இறக்கியதில் அவரை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள். எனவே அல்லாஹ் அவர்களை பசியாலும், பயத்தாலும் தண்டித்தான். அவர்கள் அல்லாஹ்வுக்கு மற்றவர்களை இணையாக்கி அவனுடைய தூதரை பொய்பித்து அழிவிற்கான காரணிகளைத் தேடி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.