×

إبراهيم

வசனம் 43

அல்-முக்தஸர்

مُهْطِعِينَ مُقْنِعِى رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ ۖ وَأَفْـِٔدَتُهُمْ هَوَآءٌ ﴿٤٣﴾

மக்கள் தங்களின் அடக்கஸ்தலங்களிலிருந்து எழுந்து அழைப்பவரின்பக்கம் விரையும் போது பதற்றத்தால் அவர்களின் தலைகள் வானத்தின்பால் உயர்ந்தவையாக இருக்கும். அவர்களின் பார்வைகள் அவர்களின்பால் திரும்ப வராது. மாறாக அவை காணும் பயங்கரங்களால் நிலைகுத்தி நின்று விடும். புத்தியில்லாமல் அவர்களின் உள்ளங்கள் வெறுமையாக இருக்கும். அந்த நாளில் பதற்றத்தினால் எதையும் அவற்றால் புரிந்துகொள்ள முடியாது.