அல்-முக்தஸர்
وَلَا تَحْسَبَنَّ ٱللَّهَ غَـٰفِلًا عَمَّا يَعْمَلُ ٱلظَّـٰلِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ ٱلْأَبْصَـٰرُ ﴿٤٢﴾
தூதரே!- அநியாயக்காரர்களின் தண்டனையை அல்லாஹ் தாமதப்படுத்துவதால் அவர்கள் செய்யும் நிராகரிப்பு, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல், இன்னும் ஏனைய செயல்களையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறான் என்று மட்டும் ஒரு போதும் எண்ணிவிடாதீர். மாறாக அவற்றை அவன் நன்கறிவான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவர்களின் வேதனையை மறுமை நாள் வரை அவன் தாமதப்படுத்துகிறான். அந்நாளில் பார்வைகள் காணும் பயங்கரங்களால் நிலைகுத்தி நின்று விடும்.