×

إبراهيم

வசனம் 44

அல்-முக்தஸர்

وَأَنذِرِ ٱلنَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ ٱلْعَذَابُ فَيَقُولُ ٱلَّذِينَ ظَلَمُوا۟ رَبَّنَآ أَخِّرْنَآ إِلَىٰٓ أَجَلٍ قَرِيبٍ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ ٱلرُّسُلَ ۗ أَوَلَمْ تَكُونُوٓا۟ أَقْسَمْتُم مِّن قَبْلُ مَا لَكُم مِّن زَوَالٍ ﴿٤٤﴾

தூதரே!- மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து உம் சமூகத்தினரை அச்சமூட்டுவீராக. அப்போது அல்லாஹ்வை நிராகரித்து, அவனுக்கு இணைவைத்து தமக்குத் தாமே அநீதியிழைத்தவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக. எங்களை விட்டும் வேதனையைத் தாமதப்படுத்துவாயாக. கொஞ்ச நாள் வரை எங்களை இவ்வுலகின்பால் திருப்பி அனுப்புவாயாக. நாங்கள் உன்மீது நம்பிக்கை கொண்டு நீ எங்களின் பக்கம் அனுப்பிய தூதர்களைப் பின்பற்றுகிறோம்.” அவர்களைக் கண்டித்தவாறு அவர்களுக்குப் பதிலளிக்கப்படும்: “மரணித்த பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுத்தவாறு நிச்சயமாக இவ்வுலகத்திலிருந்து மறுமையின்பால் எந்த இடம்பெயர்வும் இல்லை என்று நீங்கள் சத்தியமிட்டுக் கூறவில்லையா?!