×

الرعد

வசனம் 42

அல்-முக்தஸர்

وَقَدْ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَلِلَّهِ ٱلْمَكْرُ جَمِيعًا ۖ يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ ۗ وَسَيَعْلَمُ ٱلْكُفَّـٰرُ لِمَنْ عُقْبَى ٱلدَّارِ ﴿٤٢﴾

முந்தைய சமூக மக்களும் தங்களின் தூதர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்ததை நிராகரித்தார்கள். தூதர்களுக்கு அவர்கள் செய்த சதியினால் என்ன சாதித்தார்கள்? ஒன்றுமேயில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் திட்டங்கள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த வல்லது. அனைத்து படைப்பினங்களின் செயல்களையும் அவன் அறிந்து வைத்துள்ளான். அவற்றில் எதுவும் அவனை விட்டும் மறையமுடியாது. அச்சமயத்தில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமலிருந்ததனால் தாம் எவ்வளவு பெரும் தவறிழைத்தவர்கள், நம்பிக்கையாளர்கள் எவ்வளவு சரியானவர்களாக இருந்து சுவனத்தையும் நல்ல முடிவையும் கூலியாகப் பெற்றுள்ளார்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.