அல்-முக்தஸர்
وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَسْتَ مُرْسَلًا ۚ قُلْ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۢا بَيْنِى وَبَيْنَكُمْ وَمَنْ عِندَهُۥ عِلْمُ ٱلْكِتَـٰبِ ﴿٤٣﴾
நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: -“முஹம்மதே!- நீர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த தூதர் அல்ல என்று.” -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் என் இறைவனிடமிருந்து உங்களிடம் அனுப்பப்பட்டவன் என்பதற்கு உங்களுக்கும் எனக்குமிடையே சாட்சியாக இருப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். எனது வர்ணனை இடம்பெற்றுள்ள இறைவேதங்களின் அறிவு யாரிடம் உள்ளதோ அவர்களும் சாட்சி கூறுவார்கள். நம்பகமானவர் என யாருக்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறானோ நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவருக்கு எந்த தீங்கையும் அளிக்காது.