×

الرعد

வசனம் 4

அல்-முக்தஸர்

وَفِى ٱلْأَرْضِ قِطَعٌ مُّتَجَـٰوِرَٰتٌ وَجَنَّـٰتٌ مِّنْ أَعْنَـٰبٍ وَزَرْعٌ وَنَخِيلٌ صِنْوَانٌ وَغَيْرُ صِنْوَانٍ يُسْقَىٰ بِمَآءٍ وَٰحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَىٰ بَعْضٍ فِى ٱلْأُكُلِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ ﴿٤﴾

பூமியில் அருகருகே பல பகுதிகள் இருக்கின்றன. அதில் திராட்சைத் பயிர்களும் வயல்களும் ஒரே மூலத்திலிருந்து வந்த ஒன்றுபட்ட பேரீச்சை மரங்களும் தனித்தனியான பேரீச்சை மரங்களும் காணப்படுகின்றன. இந்த தோட்டங்கள், பயிர்கள் அனைத்திற்கும் ஒரே வகையான தண்ணீர்தான் பாய்ச்சப்படுகிறது. அருகருகே இருந்தும் ஒரே தண்ணீர் பாய்ச்சப்பட்டாலும் சுவை மற்றும் ஏனைய பயன்பாடுகளில் ஒன்றை விட ஒன்றை சிறப்பித்துள்ளோம். நிச்சயமாக மேற்கூறப்பட்டவற்றில் விளங்கிக்கொள்ளும் மக்களுக்கு சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் இதிலிருந்து படிப்பினை பெறுவார்கள்.