×

الرعد

வசனம் 5

அல்-முக்தஸர்

وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَءِذَا كُنَّا تُرَٰبًا أَءِنَّا لَفِى خَلْقٍ جَدِيدٍ ۗ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ ۖ وَأُو۟لَـٰٓئِكَ ٱلْأَغْلَـٰلُ فِىٓ أَعْنَاقِهِمْ ۖ وَأُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ ﴿٥﴾

தூதரே!- நீர் ஏதேனும் ஒரு விஷயத்தால் ஆச்சரியப்பட்டால் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நிராகரித்து, “நாங்கள் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்ட பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோமோ” என்று அவர்கள் கூறும் கூற்றே ஆச்சரியப்படுவதற்குத் தகுதியானதாகும். மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான் என்ற அவனின் வல்லமையை மறுக்கக்கூடிய, தங்கள் இறைவனை நிராகரிக்கக்கூடிய இவர்களின் கழுத்தில் மறுமை நாளில் நெருப்பிலான விலங்குகள் மாட்டப்படும். இவர்கள்தாம் நரகவாசிகளாவர். அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். அவர்களுக்கு அழிவு ஏற்படாது. வேதனையும் அவர்களை விட்டு நிறுத்தப்படாது.