×

الرعد

வசனம் 3

அல்-முக்தஸர்

وَهُوَ ٱلَّذِى مَدَّ ٱلْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَٰسِىَ وَأَنْهَـٰرًا ۖ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ ٱثْنَيْنِ ۖ يُغْشِى ٱلَّيْلَ ٱلنَّهَارَ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ ﴿٣﴾

அவனே பூமியை விரித்தான். அது மக்களைக் கொண்டு ஆட்டம் காணாமல் இருப்பதற்காக அதில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினான். மக்களுக்கும் அவர்களின் கால்நடைகளுக்கும் பயிர்களுக்கும் நீர்ப்புகட்டுவதற்காக அதில் ஆறுகளையும் ஏற் படுத்தினான்.ஒவ்வொரு பழவகைகளிலும் உயிரினங்களில் உள்ளதைப் போன்று அவன் ஆண், பெண் என சோடிகளை ஏற்படுத்தியுள்ளான். இரவால் பகலைப் போர்த்துகிறான். பிரகாசமாக இருந்த அது இருட்டாக ஆகிவிடுகிறது. நிச்சயமாக மேற்குறிப்பிட்டவற்றில் அல்லாஹ்வின் படைப்புகளைக் குறித்து சிந்திக்கக் கூடிய மக்களுக்கு ஏராளமான சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. அவர்கள்தாம் இந்த ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டு பயனடையக் கூடியவர்களாவர்.