×

الرعد

வசனம் 16

அல்-முக்தஸர்

قُلْ مَن رَّبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ قُلِ ٱللَّهُ ۚ قُلْ أَفَٱتَّخَذْتُم مِّن دُونِهِۦٓ أَوْلِيَآءَ لَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ نَفْعًا وَلَا ضَرًّا ۚ قُلْ هَلْ يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِى ٱلظُّلُمَـٰتُ وَٱلنُّورُ ۗ أَمْ جَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ خَلَقُوا۟ كَخَلْقِهِۦ فَتَشَـٰبَهَ ٱلْخَلْقُ عَلَيْهِمْ ۚ قُلِ ٱللَّهُ خَـٰلِقُ كُلِّ شَىْءٍ وَهُوَ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّـٰرُ ﴿١٦﴾

தூதரே!- அல்லாஹ்வுடன் மற்றவர்களை வணங்கும் நிராகரிப்பாளர்களிடம் நீர் கேட்பீராக: “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? அவையிரண்டையும் நிர்வகிப்பவன் யார்?” -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் அவையிரண்டையும் படைத்தான். அவனே அவையிரண்டையும் நிர்வகிக்கின்றான். நீங்கள் இதனை ஒத்துக் கொள்கிறீர்கள்.” -தூதரே!- நீர் அவர்களிடம் கேட்பீராக: “அல்லாஹ்வைத் தவிரவுள்ள இயலாத பாதுகாவலர்களையா நீங்கள் உங்களுக்கு எடுத்துக்கொண்டீர்கள்? அவை தமக்குத்தாமே பலனை கொண்டுவரவோ தம்மை விட்டும் எத்தீங்கையும் அகற்றவோ சக்தி பெறாது. அவ்வாறிருக்கும் போது எவ்வாறு அவை மற்றவர்களுக்குப் பயனளிக்கும்? -தூதரே!- நீர் அவர்களிடம் கேட்பீராக: “அகப் பார்வையற்ற நிராகரிப்பாளனும் பார்வையுடைய நேர்வழி பெற்ற நம்பிக்கையாளனும் சமமாவார்களா? அல்லது நிராகரிப்பு என்னும் இருள்களும் ஈமான் எனும் ஒளியும் சமமாக முடியுமா? அல்லது தமது இணை தெய்வங்களின் படைப்புடன் அல்லாஹ்வின் படைப்பும் கலந்து குழம்பி விடும் அளவுக்கு அல்லாஹ்வைப் போன்று படைக்கும் இணைகளை அல்லாஹ்வுக்கு அவர்கள் ஏற்படுத்தியுள்ளனரா? -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் எல்லாவற்றையும் படைத்தவன்; படைப்பில் அவனுக்கு யாதொரு இணையுமில்லை; அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்; அனைவரையும் மிகைத்தவன்.