×

الرعد

வசனம் 15

அல்-முக்தஸர்

وَلِلَّهِ يَسْجُدُ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَـٰلُهُم بِٱلْغُدُوِّ وَٱلْـَٔاصَالِ ۩ ﴿١٥﴾

வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் அல்லாஹ்வுக்கே சிரம்பணிந்து கட்டுப்படுகின்றனர். இதில் நம்பிக்கையாளன், நிராகரிப்பாளன் என அனைவரும் சமமானவர்களே. நம்பிக்கையாளன் விரும்பி அவனுக்குக் கட்டுப்படுகின்றான். நம்பிக்கையற்றவனோ நிர்ப்பந்தமாக அவனுக்குக் கட்டுப்படுகின்றான். ஆனால் அவனது இயல்போ விரும்பி அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறே அவனுக்குக் கூறுகிறது. நிழலுள்ள அனைத்துப் படைப்பினங்களின் நிழல்களும் பகலின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் அவனுக்கே கட்டுப்படுகின்றன.