×

الرعد

வசனம் 17

அல்-முக்தஸர்

أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَسَالَتْ أَوْدِيَةٌۢ بِقَدَرِهَا فَٱحْتَمَلَ ٱلسَّيْلُ زَبَدًا رَّابِيًا ۚ وَمِمَّا يُوقِدُونَ عَلَيْهِ فِى ٱلنَّارِ ٱبْتِغَآءَ حِلْيَةٍ أَوْ مَتَـٰعٍ زَبَدٌ مِّثْلُهُۥ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ ٱلْحَقَّ وَٱلْبَـٰطِلَ ۚ فَأَمَّا ٱلزَّبَدُ فَيَذْهَبُ جُفَآءً ۖ وَأَمَّا مَا يَنفَعُ ٱلنَّاسَ فَيَمْكُثُ فِى ٱلْأَرْضِ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَالَ ﴿١٧﴾

அசத்தியத்தின் அழிவுக்கும் சத்தியம் நிலைப்பதற்கும் உதாரணமாக வானத்திலிருந்து பொழிந்த மழையை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அதன் மூலம் ஓடைகள் சிறிய பெரிய அதன் அளவுக்கேற்ப நிரம்பி வழிகின்றன. வெள்ளம் மேலெழும் நுரைகளை சுமந்து செல்கிறது. மேலும், உருக்கி மனிதர்கள் அலங்காரமாகப் பயன்படுத்தும் நோக்கில் அவர்கள் நெருப்பிலிடும் பெறுமதியான கனிமங்களையும் அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். இரண்டிலும் நுரை மிதக்கின்றது. இவ்விரண்டு உதாரணங்கள் மூலமும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். அசத்தியம் மேலேழும் நுரையையும், கனிமங்களை உருக்கும் போது கழிந்து விடும் துருவையும் போன்றது. சத்தியம் தூய்மையான நீரைப் போன்றது. அது பருகப்படுகிறது. பழங்கள், புற்பூண்டுகள் ஆகியவற்றை முளைப்பிக்கிறது. மேலும் சத்தியம், உருக்கப்பட்ட பிறகு மீதமிருக்கும் மக்கள் பயனடையும் கனிமத்தைப் போன்றதாகும். இந்த இரண்டு உதாரணங்களைக் கூறியது போன்று அசத்தியத்திலிருந்து சத்தியம் தெளிவாக வேண்டும் என்பதற்காக மக்களுக்கு அல்லாஹ் உதாரணங்கள் கூறுகிறான்.