×

هود

வசனம் 41

அல்-முக்தஸர்

وَقَالَ ٱرْكَبُوا۟ فِيهَا بِسْمِ ٱللَّهِ مَجْر۪ىٰهَا وَمُرْسَىٰهَآ ۚ إِنَّ رَبِّى لَغَفُورٌ رَّحِيمٌ ﴿٤١﴾

நூஹ் நம்பிக்கைகொண்ட தம் குடும்பத்தாரிடமும் சமூகத்தாரிடமும் கூறினார்: “கப்பலில் ஏறிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பெயரால் கப்பல் புறப்படும். அவனுடைய பெயராலே அது நிலைகொண்டு விடும். நிச்சயமாக என் இறைவன் தன் பக்கம் மீளும் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக் கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். நம்பிக்கையாளர்களை அவன் அழிவிலிருந்து காத்ததும் அவனது கருணையின் வெளிப்பாடுதான்.