×

هود

வசனம் 40

அல்-முக்தஸர்

حَتَّىٰٓ إِذَا جَآءَ أَمْرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ قُلْنَا ٱحْمِلْ فِيهَا مِن كُلٍّ زَوْجَيْنِ ٱثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيْهِ ٱلْقَوْلُ وَمَنْ ءَامَنَ ۚ وَمَآ ءَامَنَ مَعَهُۥٓ إِلَّا قَلِيلٌ ﴿٤٠﴾

அல்லாஹ் கட்டுமாறு கட்டளையிட்ட கப்பலை நிர்மாணிக்கும் பணியை நூஹ் நிறைவு செய்தார். அவர்களை அழிக்குமாறு நம்முடைய கட்டளை வந்து, வெள்ளம் பெருக்கெடுப்பதை அறிவிக்கும் விதமாக அவர்கள் சமைத்துக் கொண்டிருந்த அடுப்பிலிருந்து நீர் பொங்கியதும். நாம் நூஹிடம் கூறினோம்: “பூமியிலுள்ள எல்லா வகையான உயிரினங்களிலிருந்தும் ஆண் பெண் ஜோடியொன்றை கப்பலில் ஏற்றிக் கொள்வீராக. நம்பிக்கை கொள்ளாததனால் மூழ்குபவர் என ஏற்கனவே முடிவாகி விட்டவர்களைத் தவிர்ந்த உம் குடும்பத்தாரையும் உம் சமூகத்தாரில் நம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றிக் கொள்வீராக. அவர் தம் சமூகத்தாரிடையே நீண்ட காலம் தங்கியிருந்து அவர்களை அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுமாறு அழைத்த போதும் அவர்களிலிருந்து குறைவானவர்களே நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.