அல்-முக்தஸர்
وَهِىَ تَجْرِى بِهِمْ فِى مَوْجٍ كَٱلْجِبَالِ وَنَادَىٰ نُوحٌ ٱبْنَهُۥ وَكَانَ فِى مَعْزِلٍ يَـٰبُنَىَّ ٱرْكَب مَّعَنَا وَلَا تَكُن مَّعَ ٱلْكَـٰفِرِينَ ﴿٤٢﴾
மலைகளைப் போன்ற மாபெரும் அலையில் மக்களையும் இன்னபிற உயிரினங்களையும் சுமந்து கொண்டு கப்பல் சென்றது. தன் தந்தை மற்றும் சமூகத்தை விட்டும் ஒரு இடத்தில் ஒதுங்கியிருந்த நிராகரிப்பாளனான தனது மகனை நூஹ் தந்தைப் பாசத்தினால் அழைத்தார். “என் மகனே,வெள்ளத்திலிருந்து தப்பிப்பதற்காக எங்களுடன் கப்பலில் ஏறிக்கொள். நிராகரிப்பாளர்களுடன் இணைந்து விடாதே. அவ்வாறு இணைந்தால் அவர்களுக்கு நேர்ந்த மூழ்கடிக்கும் அழிவு உன்னையும் பாதிக்கும்.”