×

يونس

வசனம் 4

அல்-முக்தஸர்

إِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيعًا ۖ وَعْدَ ٱللَّهِ حَقًّا ۚ إِنَّهُۥ يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ لِيَجْزِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ بِٱلْقِسْطِ ۚ وَٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْفُرُونَ ﴿٤﴾

அவன் உங்களின் செயல்களுக்குக் கூலி வழங்கும் பொருட்டு மறுமை நாளில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அல்லாஹ் மனிதர்களுக்கு உண்மையான வாக்குறுதி அளிக்கிறான். அதனை அவன் மீறுவதில்லை. நிச்சயமாக அவன் இதற்கு ஆற்றலுடையவன். அவன் படைப்பினங்களை எவ்வித முன்மாதிரியுமின்றி முதன் முதலில் உருவாக்குகிறான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அவர்களின் நன்மைகளைக் குறைக்காமலும் தீமைகளை அதிகரிக்காமலும் நியாயமாக கூலி வழங்குவதற்காக படைப்பினங்கள் மரணித்த பின்னரும் திரும்பவும் அவற்றை உருவாக்குவான். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்களுக்கு கொதிக்கும் நீர் குடிப்பதற்காகக் கொடுக்கப்படும். அதன் சூட்டினால் அவர்களின் குடல்கள் துண்டுதுண்டாகிவிடும். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்ததனால் அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு.