×

يونس

வசனம் 3

அல்-முக்தஸர்

إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۖ يُدَبِّرُ ٱلْأَمْرَ ۖ مَا مِن شَفِيعٍ إِلَّا مِنۢ بَعْدِ إِذْنِهِۦ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۚ أَفَلَا تَذَكَّرُونَ ﴿٣﴾

ஆச்சரியப்படக்கூடியவர்களே!- அல்லாஹ்வே உங்கள் இறைவன். அவன் பிரமாண்டமான வானங்களையும் பரந்து விரிந்த பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். உங்கள் இனத்திலிருந்தே ஒரு மனிதரை தூதராக அவன் அனுப்பியதையிட்டு எவ்வாறு ஆச்சரியப்படலாம்? பரந்து விரிந்த தன் ஆட்சியில் அவனே விதிகளை நிர்ணயம் செய்கிறான், நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றியும் பரிந்துரை செய்பவரைப் அவன் பொருந்திக் கொள்ளாமலும் யாரும் அவனிடம் பரிந்துரை செய்ய முடியாது. இந்த பண்புகளை உடையவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ் ஆவான். எனவே வணக்க வழிபாட்டை அவனுக்கு மட்டுமே உரித்தாக்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கும் இந்த ஆதாரங்களையும் சான்றுகளையும் கண்ட பின்னரும் நீங்கள் அறிவுரைபெற மாட்டீர்களா? ஏனெனில் சிறிதளவு புரிதல் உள்ளவர் கூட இந்த உண்மையை அறிந்து கொள்வார், அதன் மீது நம்பிக்கை கொள்வார்.