×

يونس

வசனம் 5

அல்-முக்தஸர்

هُوَ ٱلَّذِى جَعَلَ ٱلشَّمْسَ ضِيَآءً وَٱلْقَمَرَ نُورًا وَقَدَّرَهُۥ مَنَازِلَ لِتَعْلَمُوا۟ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلْحِسَابَ ۚ مَا خَلَقَ ٱللَّهُ ذَٰلِكَ إِلَّا بِٱلْحَقِّ ۚ يُفَصِّلُ ٱلْـَٔايَـٰتِ لِقَوْمٍ يَعْلَمُونَ ﴿٥﴾

அவனே சூரியனை ஒளி வீசக்கூடியதாகவும் சந்திரனை பிரகாசமளிக்கக் கூடியதாகவும் ஆக்கினான். அதன் ஓட்டத்தை இருபத்து எட்டு நிலைகளாக நிர்ணயித்துள்ளான். ஒரு நிலை என்பது ஒரு நாளில் அது கடக்கும் தொலைவாகும். -மனிதர்களே- சூரியனைக் கொண்டு நீங்கள் நாட்களின் எண்ணிக்கையையும் சந்திரனைக் கொண்டு மாதங்கள் மற்றும் வருடங்களின் எண்ணிக்கையையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவற்றை இவ்வாறு அமைத்துள்ளான். வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் அவன் ஒரு நோக்கத்திற்காகவே படைத்துள்ளான். இதன் மூலம் தன்னுடைய வல்லமையை, ஆற்றலை அவன் மக்களுக்கு வெளிப்படுத்துகிறான். தான் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய ஆதாரங்களையும் சான்றுகளையும் அறிந்து கொள்ளும் மக்களுக்காக அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.