×

يونس

வசனம் 12

அல்-முக்தஸர்

وَإِذَا مَسَّ ٱلْإِنسَـٰنَ ٱلضُّرُّ دَعَانَا لِجَنۢبِهِۦٓ أَوْ قَاعِدًا أَوْ قَآئِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُۥ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَآ إِلَىٰ ضُرٍّ مَّسَّهُۥ ۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ ﴿١٢﴾

தன் மீதே அநீதியிழைக்கும் மனிதனுக்கு ஏதேனும் நோயோ தீங்கோ ஏற்பட்டு விட்டால் பணிவாக ஒருக்களித்துப் படுத்தவனாக அல்லது அமர்ந்தவனாக அல்லது நின்றவனாக தனக்கு ஏற்பட்ட தீங்கை அகற்றும்படி நம்மிடம் மன்றாடுகிறான். நாம் அவனது பிரார்த்தனைக்குப் பதிலளித்து அவனுக்கு ஏற்பட்ட தீங்கை அகற்றி விட்டால் தனக்கு ஏற்பட்ட தீங்கை அகற்றுவதற்கு நம்மை அழைக்காதவனைப் போன்று தனது பழைய நிலைக்கே சென்று விடுகிறான். புறக்கணிக்கும் இவனுக்கு தனது வழிகேட்டில் நிலைத்திருப்பது அழகாக்கப்பட்டதைப் போன்றே அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த நிராகரிப்பு மற்றும் பாவங்கள் அழகாக்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் அதனை விடமாட்டார்கள்.