×

يونس

வசனம் 11

அல்-முக்தஸர்

وَلَوْ يُعَجِّلُ ٱللَّهُ لِلنَّاسِ ٱلشَّرَّ ٱسْتِعْجَالَهُم بِٱلْخَيْرِ لَقُضِىَ إِلَيْهِمْ أَجَلُهُمْ ۖ فَنَذَرُ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا فِى طُغْيَـٰنِهِمْ يَعْمَهُونَ ﴿١١﴾

மனிதர்கள் செய்யும் நன்மையான பிரார்த்தனைகளை அல்லாஹ் உடனுக்குடன் ஏற்றுக் கொள்வதைப் போல அவர்கள் கோபத்தின் போது தங்களுக்கோ தங்கள் பிள்ளைகளுக்கோ செல்வங்களுக்கோ எதிராக செய்யும் பிரார்த்தனையும் அவன் உடனுக்குடன் ஏற்றுக்கொண்டால் அவர்கள் அழிந்து விடுவார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறான். தன் சந்திப்பை நம்பாதவர்களை அவன் விட்டு விடுகிறான். ஏனெனில் அவர்கள் தண்டனையை அஞ்சுவதுமில்லை, நன்மையை எதிர்பார்ப்பதுமில்லை. கணக்கு தீர்க்கப்படும் நாளில் சந்தேகம் கொண்டு தடுமாறித்திரிபவர்களாக அவர்களை விட்டுவிடுகிறான்.