×

يونس

வசனம் 13

அல்-முக்தஸர்

وَلَقَدْ أَهْلَكْنَا ٱلْقُرُونَ مِن قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا۟ ۙ وَجَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ وَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلْقَوْمَ ٱلْمُجْرِمِينَ ﴿١٣﴾

இணைவைப்பாளர்களே!- உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்கள் இறைத் தூதர்களை நிராகரித்து பாவங்கள் புரிந்ததனால் நாம் அவர்களை அழித்துவிட்டோம். அவர்களிடம் நாம் அனுப்பிய தூதர்கள் தமது இறைவனிடமிருந்து கொண்டுவந்தவற்றில் தாம் உண்மையாளர்களே என்பதை நிருபிக்கக்கூடிய தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் நம்பிக்கைகொள்ளத் தயாராக இல்லாததால் அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லை. எனவே அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழிகாட்டாமல் கைவிட்டு விட்டான். அக்கிரமக்கார அந்த சமூகங்களை தண்டித்தது போலவே நாம் ஒவ்வொரு கால கட்டத்திலும், இடத்திலும் அவர்களைப் போன்றவர்களைத் தண்டிக்கிறோம்.