அல்-முக்தஸர்
يَعْتَذِرُونَ إِلَيْكُمْ إِذَا رَجَعْتُمْ إِلَيْهِمْ ۚ قُل لَّا تَعْتَذِرُوا۟ لَن نُّؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّأَنَا ٱللَّهُ مِنْ أَخْبَارِكُمْ ۚ وَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُۥ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَـٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿٩٤﴾
முஸ்லிம்கள் போர் முடிந்து திரும்பிய பிறகு பின்தங்கிய நயவஞ்சகர்கள் நொண்டிச் சாக்குப்போக்குகளை முன்வைக்கின்றனர். அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் பின்வருமாறு மறுப்புக் கூறுமாறு வழிகாட்டுகிறான்: “பொய்யான சாக்குப்போக்குகளைக் கூறாதீர்கள். நீங்கள் கூறும் காரணங்களில் உங்களை நாங்கள் ஒரு போதும் நம்பமாட்டோம். உங்களின் உள்ளங்களில் உள்ள சிலதை அல்லாஹ் நமக்கு அறிவித்துவிட்டான். உங்களை மன்னிப்பதற்கு நீங்கள் பாவமன்னிப்புக் கோருகிறீர்களா அல்லது உங்களின் நயவஞ்சகத்தனத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கவனிப்பார்கள். பின்னர் எல்லாவற்றையும் அறிந்த அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். எனவே பாவமன்னிப்புக் கோருவதன் பக்கம், நற்செயல்களின் பக்கம் விரையுங்கள்.