அல்-முக்தஸர்
إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَسْتَـْٔذِنُونَكَ وَهُمْ أَغْنِيَآءُ ۚ رَضُوا۟ بِأَن يَكُونُوا۟ مَعَ ٱلْخَوَالِفِ وَطَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَعْلَمُونَ ﴿٩٣﴾
தகுந்த காரணமுடையோரைத் தண்டிக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தி விட்டு தண்டனைக்குரியோர் யார் என்பதைக் குறிப்பிடுகிறான். -தூதரே!- போர் புரிவதற்குத் தேவையான வசதிகளைப் பெற்றிருந்தும் போரை விட்டும் பின்தங்குவதற்கு உம்மிடம் அனுமதி கோருபவர்கள்தாம் தண்டனைக்குரியவர்கள். பின்தங்கி வீடுகளில் இருப்போருடன் தங்கியிருப்பதன் மூலம் இழிவையும் அவமானத்தையும் தமக்கு அவர்கள் விரும்பினார்கள். அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். எனவே அவைகள் அறிவுரையால் பயனடையமாட்டா. இவ்வாறு முத்திரையிடப்பட்டதனால் அவர்களால் தங்களுக்கு நன்மையானதை அறிந்து அதனைத் தேர்ந்தெடுக்கவும் முடியாது; தீமையானதை அறிந்து அதிலிருந்து விலகிக் கொள்ளவும் முடியாது.