×

التوبة

வசனம் 69

அல்-முக்தஸர்

كَٱلَّذِينَ مِن قَبْلِكُمْ كَانُوٓا۟ أَشَدَّ مِنكُمْ قُوَّةً وَأَكْثَرَ أَمْوَٰلًا وَأَوْلَـٰدًا فَٱسْتَمْتَعُوا۟ بِخَلَـٰقِهِمْ فَٱسْتَمْتَعْتُم بِخَلَـٰقِكُمْ كَمَا ٱسْتَمْتَعَ ٱلَّذِينَ مِن قَبْلِكُم بِخَلَـٰقِهِمْ وَخُضْتُمْ كَٱلَّذِى خَاضُوٓا۟ ۚ أُو۟لَـٰٓئِكَ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْخَـٰسِرُونَ ﴿٦٩﴾

நயவஞ்சகர்களே! நிராகரிப்பிலும் பரிகாசம் செய்வதிலும் நீங்கள் உங்களுக்கு முன்னர் நிராகரித்த சமூகங்களைப் போன்றவர்கள்தாம். அவர்கள் உங்களைவிட அதிக பலமும் பணமும் பிள்ளைகளும் உடையவர்களாக இருந்தார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட உலக இன்பங்களையும் ஆசாபாசங்களையும் அவர்கள் அனுபவித்தார்கள். -நயவஞ்சகர்களே!- நிராகரித்த உங்களுக்கு முந்தைய சமூகங்கள் தமது பங்கை அனுபவித்ததைப் போலவே நீங்களும் உங்களுக்கு விதிக்கப்பட்ட பங்கை அனுபவியுங்கள். அவர்கள் சத்தியத்தை நிராகரித்து தங்களின் தூதர்களைக் குறை கூறியதைப் போலவே நீங்களும் சத்தியத்தை நிராகரித்து தூதரைக் குறை கூறியுள்ளீர்கள். இழிவான இந்த பண்புகளை உடையவர்களின் செயல்கள் நிராகரிப்பினால் அல்லாஹ்விடத்தில் வீணாகிவிட்டதனால் அவைகள் பயனற்றுவிட்டன. இவர்கள் தாம் தங்களை அழிவில் ஆழ்த்தி தமக்குத் தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்ட நஷ்டவாளிகளாவர்.