×

التوبة

வசனம் 68

அல்-முக்தஸர்

وَعَدَ ٱللَّهُ ٱلْمُنَـٰفِقِينَ وَٱلْمُنَـٰفِقَـٰتِ وَٱلْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَـٰلِدِينَ فِيهَا ۚ هِىَ حَسْبُهُمْ ۚ وَلَعَنَهُمُ ٱللَّهُ ۖ وَلَهُمْ عَذَابٌ مُّقِيمٌ ﴿٦٨﴾

பாவமன்னிப்புக் கோராத நயவஞ்சகர்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் நரக நெருப்பில் நுழைவிப்பதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். இதுவே அவர்களுக்குப் போதுமான தண்டனையாகும். மேலும் அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களைத் தூரமாக்கிவிட்டான். அவர்களுக்கு தொடரான வேதனையுண்டு.