அல்-முக்தஸர்
ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهَاجَرُوا۟ وَجَـٰهَدُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ أَعْظَمُ دَرَجَةً عِندَ ٱللَّهِ ۚ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْفَآئِزُونَ ﴿٢٠﴾
நம்பிக்கை கொண்டு நிராகரிப்பாளர்கள் வாழும் நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை நோக்கி புலம்பெயர்ந்து, செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது போன்றவற்றை ஒருசேர செய்பவர்கள் மற்றவர்களைவிட அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் சுவனத்தைப் பெறுபவர்கள்.