×

التوبة

வசனம் 19

அல்-முக்தஸர்

أَجَعَلْتُمْ سِقَايَةَ ٱلْحَآجِّ وَعِمَارَةَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ كَمَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَجَـٰهَدَ فِى سَبِيلِ ٱللَّهِ ۚ لَا يَسْتَوُۥنَ عِندَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ ﴿١٩﴾

இணைவைப்பாளர்களே!- ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டி, மஸ்ஜிதுல் ஹராமைப் பராமரிப்பவர்களை, அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவன் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்து நிராகரிப்பாளர்களின் வார்த்தையை தாழ்த்துவதற்காக ஜிஹாது செய்யக்கூடியவர்களுக்கு சமமாக்கி விட்டீர்களா? அல்லாஹ்விடம் சிறப்பைப் பெறுவதில் அவர்களனைவரையும் சமமாக்கிவிட்டீர்களா? அவர்கள் அல்லாஹ்விடத்தில் ஒருபோதும் சமமாக மாட்டார்கள். ஷிர்க்கின் மூலம் அநீதியிழைக்கும் அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான். அவர்கள் ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவது போன்ற நற்செயல்களைச் செய்தாலும் சரியே.