அல்-முக்தஸர்
فَإِن تَوَلَّوْا۟ فَقُلْ حَسْبِىَ ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَهُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ ﴿١٢٩﴾
தூதரே!- அவர்கள் உம்மைப் புறக்கணித்து நீர் கொண்டு வந்துள்ளதன் மீது நம்பிக்கை கொள்ளவில்லையெனில் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவனையே நான் சார்ந்துள்ளேன். அவன் மகத்தான அரியணையின் அதிபதியாவான்.