அல்-முக்தஸர்
لَقَدْ جَآءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِٱلْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ ﴿١٢٨﴾
அரபுக்களே! உங்கள் இனத்திலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் உங்களைப் போன்ற அரபியாவார். உங்களுக்கு சிரமம் ஏற்படுவது அவருக்கு சிரமமாக இருக்கின்றது. உங்களுக்கு வழிகாட்டுவதிலும் உங்களின் மீது அக்கறை காட்டுவதிலும் அவர் மிகவும் ஆசையுடையவர். குறிப்பாக நம்பிக்கையாளர்களின் மீது பரிவுடையவராகவும் கருணையாளராகவும் அவர் இருக்கின்றார்.