அல்-முக்தஸர்
وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِلَّ قَوْمًۢا بَعْدَ إِذْ هَدَىٰهُمْ حَتَّىٰ يُبَيِّنَ لَهُم مَّا يَتَّقُونَ ۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ ﴿١١٥﴾
அல்லாஹ் ஒரு சமூகத்திற்கு நேர்வழிகாட்டிய பின் தடைசெய்யப்பட்டவற்றை அவர்களுக்குத் தெளிவாக்கும் வரை அவர்களை வழிகேடர்கள் என தீர்ப்பு வழங்கமாட்டான். தடைசெய்யப்பட்டதை விளக்கிய பின்னர் அவர்கள் தடைசெய்யப்பட்ட செயல்களில் ஈடுபட்டால் அவர்களை வழிகேடர்கள் எனத் தீர்ப்பளித்துவிடுவான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. நீங்கள் அறியாமலிருந்தவற்றை அவன் உங்களுக்குக் கற்றுத் தந்துள்ளான்.