×

التوبة

வசனம் 114

அல்-முக்தஸர்

وَمَا كَانَ ٱسْتِغْفَارُ إِبْرَٰهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوْعِدَةٍ وَعَدَهَآ إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥٓ أَنَّهُۥ عَدُوٌّ لِّلَّهِ تَبَرَّأَ مِنْهُ ۚ إِنَّ إِبْرَٰهِيمَ لَأَوَّٰهٌ حَلِيمٌ ﴿١١٤﴾

இப்ராஹீம் தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியது அவர் தம் தந்தை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையில், அவருக்காக பாவமன்னிப்பைக் கோருவேன் என அவருக்கு அளித்த வாக்குறுதியினாலாகும். ஆனால் தம் தந்தைக்கு அறிவுரை பலனளிக்கவில்லை என்பதனால் அல்லது அவர் நிராகரிப்பாளராகவே மரணிப்பார் என்ற இறை செய்தியை அவர் அறிந்ததன் காரணத்தால் அவர் அல்லாஹ்வின் எதிரி என்று இப்ராஹீமுக்கு தெளிவான பின்னர் அவர் தம் தந்தையை விட்டும் விலகிக் கொண்டார். இப்ராஹீம் தனது தந்தைக்குச் செய்த பாவமன்னிப்பு அவரது ஒரு முடிவே தவிர அல்லாஹ் அவருக்கு வழங்கிய தீர்ப்புக்கு மாறாக தம் தந்தைக்காக பாவமன்னிப்புக் கோரவில்லை. இப்ராஹீம் அல்லாஹ்விடம் அதிகம் மன்றாடக் கூடியவராக, அநியாயக்கார தம் சமூகத்தை சகித்துக் கொள்பவராக, அவர்களை மன்னிக்கக்கூடியவராக இருந்தார்.