×

التوبة

வசனம் 109

அல்-முக்தஸர்

أَفَمَنْ أَسَّسَ بُنْيَـٰنَهُۥ عَلَىٰ تَقْوَىٰ مِنَ ٱللَّهِ وَرِضْوَٰنٍ خَيْرٌ أَم مَّنْ أَسَّسَ بُنْيَـٰنَهُۥ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٍ فَٱنْهَارَ بِهِۦ فِى نَارِ جَهَنَّمَ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ ﴿١٠٩﴾

அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியும் அதிகமான நன்மையான செயல்களின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியுடனும் தம் கட்டடத்தை நிறுவியவர்கள், முஸ்லிம்களுக்குத் தீங்கிழைக்கவும் அவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தவும் நிராகரிப்பை வலுப்படுத்தவும் ஒரு பள்ளிவாயிலை கட்டியவர்களுக்கு சமமாவார்களா என்ன? இருவரும் ஒருபோதும் சமமாக மாட்டார்கள். முதல் கட்டடம் உறுதியானது. இடிந்து வீழ்ந்து விடும் என அஞ்ச வேண்டியதில்லை. இரண்டாவது கட்டடத்திற்கு உதாரணம் குழியின் ஓரத்தில் ஒரு கட்டடத்தை கட்டியவனுக்கு ஒத்ததாகும். அதனால் அது இடிந்து வீழ்ந்து விட்டது. அவனுடன் சேர்ந்து அவனது கட்டிடமும் நரகப் படுகுழியில் சரிந்து விழுந்து விட்டது. நிராகரிப்பினாலும் நயவஞ்சகத்தினாலும் அநியாயம் செய்யும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்டமாட்டான்.