×

التوبة

வசனம் 108

அல்-முக்தஸர்

لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا۟ ۚ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُطَّهِّرِينَ ﴿١٠٨﴾

நபியே!- இப்படிப்பட்ட பள்ளிவாயிலில் தொழுகைக்காக நயவஞ்சகர்கள் உங்களுக்கு விடுத்துள்ள அழைப்பை ஏற்காதீர். முதன் முதலில் இறையச்சத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட ‘குபா’ பள்ளிவாயிலே நிராகரிப்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட இந்த பள்ளிவாயிலை விட நீர் நின்று தொழுவதற்குத் தகுதியான பள்ளிவாயிலாகும். அங்கு அழுக்குகளிலிருந்து தண்ணீரின் மூலமும் பாவங்களிலிருந்து பாவமன்னிப்புக் கோரிக்கையின் மூலமும் தூய்மையாவதை விரும்பக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். அழுக்குகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தூய்மையாக இருக்கக்கூடியவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.