அல்-முக்தஸர்
وَءَاخَرُونَ ٱعْتَرَفُوا۟ بِذُنُوبِهِمْ خَلَطُوا۟ عَمَلًا صَـٰلِحًا وَءَاخَرَ سَيِّئًا عَسَى ٱللَّهُ أَن يَتُوبَ عَلَيْهِمْ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿١٠٢﴾
மதீனாவில் காரணமின்றி போரை விட்டுப் பின்தங்கிய வேறு மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் பொய்யான சாக்குப்போக்குகளைக் கூறாமல் தங்களிடம் போரை விட்டுப் பின்தங்கியதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என்பதை ஒத்துக் கொண்டுள்ளார்கள். அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு அவனது சட்டதிட்டங்களைப் பற்றிப்பிடித்து அவனது பாதையில் போரிட்ட தங்களின் முந்தைய நற்செயல்களோடு தீய செயலையும் கலந்துவிட்டார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பை எதிர்பார்க்கிறார்கள். நிச்சயமாக தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.