அல்-முக்தஸர்
وَمِمَّنْ حَوْلَكُم مِّنَ ٱلْأَعْرَابِ مُنَـٰفِقُونَ ۖ وَمِنْ أَهْلِ ٱلْمَدِينَةِ ۖ مَرَدُوا۟ عَلَى ٱلنِّفَاقِ لَا تَعْلَمُهُمْ ۖ نَحْنُ نَعْلَمُهُمْ ۚ سَنُعَذِّبُهُم مَّرَّتَيْنِ ثُمَّ يُرَدُّونَ إِلَىٰ عَذَابٍ عَظِيمٍ ﴿١٠١﴾
மதீனாவைச் சுற்றி வசிக்கும் நாட்டுப்புறவாசிகளிலும் நயவஞ்சகர்கள் காணப்படுகிறார்கள். மதீனாவாசிகளிலும் நயவஞ்சகத்தில் ஊறியிருக்கும் நயவஞ்சகர்கள் காணப்படுகிறார்கள். -தூதரே!- அவர்களை நீர் அறியமாட்டீர். அல்லாஹ்வே அவர்களை அறிவான். அவன் அவர்களுக்கு இருமுறை தண்டனையளிப்பான். இவ்வுலகில் அவர்களின் நயவஞ்சகத்தனத்தை வெளிப்படுத்தியும் அவர்களைக் கொன்றும் கைதிகளாகப் பிடித்தும் அவர்களைத் தண்டிப்பான். பின்னர் மண்ணறையின் வேதனை மற்றும் மறுமை நாளில் நரகத்தில் அடித்தளத்தில் கடும் வேதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள்.