அல்-முக்தஸர்
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَٱسْتَجَابَ لَكُمْ أَنِّى مُمِدُّكُم بِأَلْفٍ مِّنَ ٱلْمَلَـٰٓئِكَةِ مُرْدِفِينَ ﴿٩﴾
பத்ரு உடைய நாளில் அல்லாஹ்விடம் உங்களின் எதிரிகளுக்கு எதிராக நீங்கள் உதவி தேடியதை நினைவுகூருங்கள். -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்தான். ஒருவரையொருவர் பின்தொடர்ந்து வந்த ஆயிரம் வானவர்களைக் கொண்டு அவன் உங்களுக்கு உதவிசெய்தான்.