அல்-முக்தஸர்
وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشْرَىٰ وَلِتَطْمَئِنَّ بِهِۦ قُلُوبُكُمْ ۚ وَمَا ٱلنَّصْرُ إِلَّا مِنْ عِندِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ﴿١٠﴾
நம்பிக்கையாளர்களே!- வானவர்களைக் கொண்டு உதவி புரிவதை அவன் உங்கள் எதிரிக்கு எதிராக உங்களுக்கு அவன் உதவி செய்வான் என்ற நற்செய்தியாகவே ஆக்கியுள்ளான். மேலும் வெற்றியை உறுதியாக நம்பி உங்கள் உள்ளங்கள் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவும் அவ்வுதவியைச் செய்தான். வெற்றி ஆள் பலம் ஆயுத பலத்தைக் கொண்டல்ல. மாறாக அல்லாஹ்விடமிருந்தே வெற்றி கிடைக்கிறது. அவன் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தான் வழங்கும் சட்டங்களில், அமைத்த விதிகளில், அவன் ஞானம்மிக்கவன்.