×

الأنفال

வசனம் 39

அல்-முக்தஸர்

وَقَـٰتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ ٱلدِّينُ كُلُّهُۥ لِلَّهِ ۚ فَإِنِ ٱنتَهَوْا۟ فَإِنَّ ٱللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ ﴿٣٩﴾

நம்பிக்கையாளர்களே!- இணைவைப்பும், அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு முஸ்லிம்களைத் தடுப்பதும் நீங்கி, மார்க்கமும் கட்டுப்படுதலும் யாதொரு இணையுமற்ற அல்லாஹ்வுக்கே மட்டுமே உரித்தாகும் வரை உங்களின் எதிரிகளான நிராகரிப்பாளர்களுடன் போரிடுங்கள். அவர்கள் இணைவைப்பு, அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தல் ஆகிவற்றை விட்டும் விலகிவிட்டால் நீங்களும் அவர்களை விட்டு விடுங்கள். ஏனெனில் அல்லாஹ் அவர்களது செயல்களைக் கவனித்துக்கொண்டுள்ளான். எந்த மறைவானதும் அவனுக்கு மறைவானதல்ல.