×

الأنفال

வசனம் 38

அல்-முக்தஸர்

قُل لِّلَّذِينَ كَفَرُوٓا۟ إِن يَنتَهُوا۟ يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ وَإِن يَعُودُوا۟ فَقَدْ مَضَتْ سُنَّتُ ٱلْأَوَّلِينَ ﴿٣٨﴾

தூதரே!- அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்த உம் சமூகத்தாரிடம் கூறுவீராக: “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர்கள் நிராகரிக்காமல், நம்பிக்கைகொண்டவர்களை அவனுடைய பாதையை விட்டுத் தடுக்காமல் அவர்கள் விலகிக் கொண்டால் அல்லாஹ் அவர்கள் முன்னர் செய்த பாவங்களை மன்னித்துவிடுவான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது முந்தைய பாவங்களை அழித்துவிடக் கூடியதாகும் அவர்கள் நிராகரிப்பின் பக்கம் மீண்டும் திரும்பினால், முந்தைய சமூகங்களுக்கான அல்லாஹ்வின் வழிமுறையே செல்லுபடியாகும். அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்த போது அல்லாஹ் அவர்களை துரிதமாகத் தண்டித்தான்.