அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱسْتَجِيبُوا۟ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ ۖ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَحُولُ بَيْنَ ٱلْمَرْءِ وَقَلْبِهِۦ وَأَنَّهُۥٓ إِلَيْهِ تُحْشَرُونَ ﴿٢٤﴾
அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களின் உண்மையான வாழ்வுள்ள சத்தியத்தின் பக்கம் உங்களை அழைத்தால், அவ்விருவரும் கட்டளையிட்டுள்ளவைகளுக்குக் கட்டுப்பட்டு தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி, அவர்களுக்குப் பதிலளியுங்கள். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை உறுதியாக நம்புங்கள். சத்தியத்தை மறுத்து சத்தியத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது என நீங்கள் விரும்பினால் உங்களுக்கும் சத்தியத்திற்கு அடிபணிவதற்கும் மத்தியில் குறுக்கிடுவதற்கும் அவன் சக்தியுடையவன். எனவே அவன் பக்கம் விரைந்து செல்லுங்கள். மறுமை நாளில் உங்கள் அனைவரையும் அவன் ஒன்றுதிரட்டுவான், நீங்கள் இவ்வுலகில் செய்த செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான் என்பதை உறுதியாக நம்புங்கள்.