×

الأنفال

வசனம் 23

அல்-முக்தஸர்

وَلَوْ عَلِمَ ٱللَّهُ فِيهِمْ خَيْرًا لَّأَسْمَعَهُمْ ۖ وَلَوْ أَسْمَعَهُمْ لَتَوَلَّوا۟ وَّهُم مُّعْرِضُونَ ﴿٢٣﴾

இந்த நிராகரிக்கும் இணைவைப்பாளர்களிடம் ஏதேனும் நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்திருந்தால் பயன் பெறும் விதத்தில் அவர்களைச் செவியேற்கச் செய்திருப்பான். ஆதாரங்களையும் சான்றுகளையும் விளங்கியிருப்பார்கள். ஆயினும் அவர்களிடம் நன்மை இல்லை என்பதை அல்லாஹ் அறிந்துகொண்டான். -ஒருவேளை- அல்லாஹ் அவர்களை செவியேற்கச் செய்திருந்தாலும் பிடிவாதத்தினால் ஈமானைப் புறக்கணித்திருப்பார்கள்.