அல்-முக்தஸர்
فَكَذَّبُوهُ فَأَنجَيْنَـٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ فِى ٱلْفُلْكِ وَأَغْرَقْنَا ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَآ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًا عَمِينَ ﴿٦٤﴾
அவரது சமூகத்தினர் அவர் மீது நம்பிக்கைகொள்ளாமல் அவரை நிராகரித்தனர். மாறாக தங்களின் நிராகரிப்பிலேயே நிலைத்திருந்தார்கள். அவர்களை அழித்து விடும்படி அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார். நாம் அவரையும் அவருடன் கப்பலில் ஏறிய நம்பிக்கையாளர்களையும் மூழ்காது காப்பாற்றினோம். நம்முடைய சான்றுகளை நிராகரித்து அதில் நிலைத்திருந்தவர்களை, தண்டிப்பதற்காக இறக்கப்பட்ட வெள்ளத்தினால் மூழ்கடித்து அழித்து விட்டோம். நிச்சயமாக அவர்களின் உள்ளங்கள் சத்தியத்தை விட்டும் குருடாகவே இருந்தன.